Sunday, August 23, 2015

இனி... தாஜ்மஹாலை இரவு நேரங்களிலும் ஹாயாக சுற்றிப் பார்க்கலாம்!!!

Sunday, August 23, 2015
தாஜ்மஹாலை இரவு நேரங்களில் நேரில் சென்று பார்க்க, முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
இந்தியாவில் உள்ள மக்களும் சரி, வெளிநாட்டில் இருந்துவரும் சுற்றுலாப் பயணிகளும் சரி, அவர்கள் விரும்பி பார்க்கும் இடம் எது என்றால், அது, தாஜ்மஹால் என்று சொல்லிவிடலாம். அந்த அளவு மக்கள் மனங்களில் நிறைந்துள்ளது.

தாஜ்மஹாலை பகல் நேரங்களில் பலர் நேரில் சென்று பார்த்த வண்ணம் உள்ளனர். தற்போது, தாஜ்மஹாலை இரவு நேரங்களில் நேரில் சென்று பார்க்க, டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். இரவு  8.30 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை தாஜ்மஹாலை பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்படுள்ளது. ஒரு நபருக்கு 30 நிமிடங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில்,  தாஜ்மஹாலை இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் நேரில் சென்று பார்க்க சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. அதன்படி, தாஜ்மஹாலை இரவு நேரங்களில் நேரில் சென்று பார்வையிடும் நாள் அன்று மாலை 3 மணி வரை ஆன்லைனில் ஈ-டிக்கெட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.

இதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என மத்திய சுற்றுலா துறை இணை மந்திரி மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment