Sunday, August 23, 2015
தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தேசிய அரசாங்கத்தை நிறுவுவது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையில் ஐவர் அடங்கிய குறித்த குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற மற்றுமொரு சந்திப்பில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் கருத்தை ஆராய டப்ளியூ.டி.ஜே.செனவிரத்ன தலைமையில் மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டது.
இதன்படி இந்த இரண்டு குழுவினரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளர் துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment