Wednesday, August 19, 2015

தேர்தல் முடிவுகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும், மக்கள் ஆணைக்கு இணங்க அரசியலில் தான் தொடர்ந்தும் ஈடுபட போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்!

Wednesday, August 19, 2015
இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பெற்ற முடிவை தான் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும், மக்கள் ஆணைக்கு இணங்க அரசியலில் தான் தொடர்ந்தும் ஈடுபட போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்கும் , கட்சிக்காக உழைத்தோருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்...
 
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் சவால்களுக்கு மத்தியில் தான் பெற்ற வாக்கு முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.நாட்டிற்காக தான் ஆற்றிய சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
இந்த தேர்தலில் எமது கூட்டமைப்புக்கு வாக்களித்த அனைத்து அன்பான வாக்காளர்களுக்கும் இரவு பகல் பாராது பாடுபட்ட எமது கட்சியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கிடைத்துள்ள மக்கள் ஆணையின்படி நான் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் என்றும் பாராளுமன்றில் ஆசனம் ஏற்று இதுவரை நாட்டுக்கு மக்களுக்கு செய்த சேவையை தொடர்ந்து செய்வேன் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் விருப்பத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்."
 
தனது சொந்த மாவட்டத்துக்கு வெளியில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ஷ, அவரது கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளில் 89 சதவீதம் அளவுக்கு வாக்குகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment