நடந்து முடிந்த தேர்தல்களது முடிவுகளின் பிரகாரம் சாணக்கியன் சுமந்திரனல்ல சிறீதரனே என கூட்டமைப்பு வட்டாரங்கள் அதிர்ந்து போயுள்ளன.
வாக்கெண்ணும் பணியில் ஈடுபட்ட அரச அதிகாரியொருவர் வெளியிட்ட உண்மை தகவல் இதுவாகும். விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டவேளை 50 கொண்ட கட்டு
க்களாக கணிப்பிடப்பட்ட போது கிளிநொச்சியில் பல வாக்களிப்பு நிலையங்களிலும் அனைத்திலும் சிறீதரன் எனும் நபருக்கு மட்டுமே விருப்பு வாக்குகள் வீழ்ந்துள்ளது.
ஏனைய சில இடங்களில் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கூட்டமைப்பின் ஏனைய வேட்பாளர்களிற்கு வீழ்ந்துள்ளது. தேர்தல் பரப்புரை மேடைகளில் தனக்கும் சுமந்திரன், மாவை ஆகியோருக்கும் வாக்களிக்க சிறீதரன் கோரிவந்திருந்தார். ஆனால் வாக்களிப்பின் போது அவர்களிற்கு சொல்லிக்கொள்ளத்தக்கதாக வாக்குகள் வீழ்ந்திருக்கவில்லை.
இந்நிலையில் சிறீதரனது செயற்பாட்டாளர்கள் வாக்களர்களிடம் நேரடியாக சிறீதரன் தவிர்ந்த வேறு எவரிற்கும் வாக்களிக்க வேண்டாமென கோரியிருந்தமை அம்பலமாகியிருந்தது.
தனது செயற்பாட்டாளர்களிற்கு சிறீதரன் நேரடியாக இதனை அறிவுறுத்தியதாகவும் அவர்கள் மேற்கொண்ட பரப்புரைகள் காரணமாக அவரிற்கு மட்டும் விருப்பு வாக்களிக்கப்பட்டமை அம்பலமாகியுள்ளது.
இதனிடையே யாழப்பாணத்தில் தனது சக வேட்பாளர்களிடமிருந்து விருப்பு வாக்குகளை பெற்றே மிகக்கூடிய வாக்குகளை அவர் பெற்றிருந்ததாகவும் அம்பலமாகியுள்ளது.
No comments:
Post a Comment