Saturday, August 22, 2015
இலங்கை தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சிகளால்
தெரிவுசெய்யப்பட்டுள்ள தேசியப் பட்டியல் மூலமான பாராளுமன்ற உறுப்பினர்களின்
பெயர்கள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியலுக்கான பெயர்கள் நேற்று (21) தேர்தல்கள் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில்
பிரேமஜயந்தவின் கையொப்பத்துடன் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள்
சமர்ப்பிக்கப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையார் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு இம்முறை தேசிய பட்டியலில் 13 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 12 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இலங்கை தமிழரசு கட்சிக்கு தலா இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 223 பேரின் பெயர்கள் இதுவரை வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, 29 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் 27 பேரின்
பெயர்களை நேற்றிரவு வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை
எடுத்திருந்ததாக தேர்தல்கள் செயலகம் மேலும் தெரிவித்தது.
No comments:
Post a Comment