Wednesday, August 05, 2015
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்
பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டு, அந்நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகளால் இந்திய
மண்ணில் அரங்கேற்றப்பட்டதாகவும், இதில் முக்கிய நபராக செயல்பட்ட அஜ்மல்
கசாப் பாகிஸ்தானை சேர்ந்தவன்தான் என்றும் அந்நாட்டின் மத்திய உளவுத்துறையான
'எப்.ஐ.ஏ.'வின் முன்னாள் இயக்குனர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் வெளியாகும் பிரபல நாளேடான 'டான்' பத்திரிகையில் இந்த கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்துள்ள அந்நாட்டின் மத்திய உளவுத்துறை முன்னாள் இயக்குனர் ஜெனரல் தாரிக் கோஷா, மும்பை தாக்குதலை திட்டமிட்டு, செயல்படுத்திய பாகிஸ்தான், அது தொடர்பான பின்விளைவுகளை சந்தித்தும், சமாளித்தும் தீர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் ரஷ்யாவின் உபா நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் எதிர்பாராத விதமாக சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்புக்குப் பின்னர், இரு நாடுகளுக்கு இடையில் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் மத்திய உளவுத்துறையின் முன்னாள் இயக்குனர் வெளியிட்டுள்ள இந்த கருத்து சர்வதேச அரசியல் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 26-11-2008 அன்று நடைபெற்ற மும்பை தாக்குதல் சம்பவத்தில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியானது நினைவிருக்கலாம்.

No comments:
Post a Comment