Monday, August 24, 2015
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு
தீர்மானித்துள்ளதாகத் தெதரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமயிலான புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிர்வாகம், கூட்டமைப்பிலிருந்து விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2004ம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பின்தள்ளி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் முன்னணி பெற்று வருவதாக தற்போதைய சுதந்திரக் கட்சி நிர்வாகம் கருதுகின்றது.
இதேவேளை, சுதந்திரக் கட்சி விலகிக் கொண்டாலும் வெற்றிலைச் சின்னத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு சுதந்திரக் கூட்டமைப்பு முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதியினர் கட்சி, கூட்டமைப்பிலிருந்து பிளவடைவதனை விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment