Tuesday, August 04, 2015
குருணாகல் சுதந்திர முன்னணி அலுவலகத்தில் இருந்து கைது செய்யப்பட்ட நபர் யார் என்பதனை அவரிடம் விசாரணை மேற்கொண்டதன் பின்னரே கூற முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 31ஆம் திகதி சுதந்திர முன்னணி அலுவலகத்தில் வைத்து இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என அன்றைய தினம் குருணாகலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment