Sunday, August 23, 2015
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இடம்பெற்ற சட்ட மீறல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து 24 முறைப்பாடுகள் தேர்தலுக்கு பின்னர் பதிவாகியுள்ளதாகவும், இந்த முறைப்பாடுகளுக்கு அமைய 20 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் சுற்றிவளைப்புக்களின் போது மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது..
முடிவுக்கு வந்துள்ள விசாரணைகள் – கைதாகவுள்ள உயர்மட்ட அரசியல்வாதிகள்!
நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பல அரசியல்வாதிகள் கைது செய்யப்படவுள்ளனர்.
பொதுத்தேர்தல் நடைபெற்றதன் காரணமாக தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
நிதிக்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்காக ஏற்கனவே மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன.
இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரும் விரைவில் விசாரணைக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன துஸ்பிரயோகம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தொடர்பான விசாரணைகளும் நிறைவுக்கு வந்துள்ளன.
No comments:
Post a Comment