Monday, July 27, 2015

மற்றுமொரு முன்னாள் புலி உறுப்பினர் திருச்சியில் கைது!

Monday, July 27, 2015
திருச்சி:மற்றுமொரு முன்னாள் புலி உறுப்பினர் நேற்று இராமநாதபுரம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.

குமரகுரு எனப்படும் சந்தேகத்திற்குரியவர், திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு போலி கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்கு உதவியதாக கருதப்படும் மேலும் இரண்டு பேர் அந்த தருணத்தில் கைதாகியுள்ளனர்.

அவர், இலங்கைக்கு வான்வழியாக பயணிக்க முற்படும் போதே தாம் அவரை கைது செய்ததாக திருச்சிராப்பள்ளி காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வாரத்திலும்  சயனைட் குப்பிகள் மற்றும் வெடிப்பொருட்களுடன்  இலங்கையர் உள்ளிட்ட நான்கு பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.            

No comments:

Post a Comment