Tuesday, July 28, 2015

நான் சொல்வதை செய்யும் ஒருவர்: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!

Tuesday, July 28, 2015
தாம் சொல்வதை செய்யும் ஒருவர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது, தமது ஆட்சியின் போது மக்களின் கைகளில் பணப்புழக்கம் இருந்தது.
இன்று பொருளாதாரம், வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 67 வருடங்களாக அரசாங்கங்களுக்கு மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை.
இதற்கு காரணம், பதவிக்கு வருபவர்கள் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதைக் காட்டிலும், தமது பிரச்சனைகளை தீர்ப்பதிலேயே அதிக அக்கறை கொள்கின்றனர் என ஜே.வி.பி. இன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், ஜே.வி.பி. யை பொறுத்தவரையில், தமது பிரச்சனையை அல்லாது மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதிலேயே கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் திலான் பெரேரா பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது,  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 14 மாவட்டங்களில் வெற்றிபெற்று அதன் பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பார் என தெரிவித்துள்ளார்.
ஊடகத்துறை அமைச்சர் ஜயந்த கருணாதிலக, மகிந்த ராஜபக்ச தொடர்பாக கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமக்கு 2 வருட கால ஜனாதிபதி பதவிக்காலம் எஞ்சியிருந்த போதே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட மகிந்த ராஜபக்ச மக்களால் நிராகரிக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
தற்போது, தமது மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் போட்டியிடாது பரசூட் மூலம் குருநாகல் சென்று தனது வாக்கைக்கூட தனக்காக பயன்படுத்த முடியாத கவலைக்குரியவராக மாறியுள்ளார் என்றும் ஜயந்த கருணாதிலக குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment