Monday, July 27, 2015

(புலி)கூட்டமைப்பின் சம்பந்தன் பங்கெடுக்கவிருந்த கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஆள்பிடிக்க சென்றிருந்த உள்ளுராட்சி தலைவர்கள் மீது வலி.வடக்கு முகாம் மக்கள் தாக்குதல் முயற்சி!!

(புலி)கூட்டமைப்பின் சம்பந்தன் பங்கெடுக்கவிருந்த கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஆள்பிடிக்க சென்றிருந்த உள்ளுராட்சி தலைவர்கள் மீது வலி.வடக்கு முகாம் மக்கள் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தினை அடுத்து முகாம் தலைவர்களை மாவை சேனாதிராஜா கலந்துரையாட அழைத்திருந்த போதும் அச்சந்திப்பினை முகாம் மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் மருதனார் மடப் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சேர்ப்பதற்கு வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமில் உள்ள மக்களை அணிதிரட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதன்படி சுன்னாகம் பிரதேச சபைத் தலைவர் பிரகாஷ் மற்றும் சுகிர்தனும் முகாம் மக்களை  (புலி)கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்திற்கு வருமாறு அழைக்கச் சென்றுள்ளனர்.

இதன் போது ஆத்திரமடைந்த முகாம் மக்கள் தாம் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும், இம்முறை வாக்களிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இருந்த போதும் மக்களின் தொகையினை காட்டுவதற்காகவாவது முகாம் மக்கள் வரவேண்டும், கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் மேலும் ஆததிரடைந்தவர்கள் பிரச்சாரத்திற்கு அழைத்தவர்களை அங்கதிருந்து வெளியேறுமாறு சத்தமிட்டனர். மக்கள் கொந்தளித்ததை அடுத்து பிரச்சார கூட்டத்திற்கு ஆட்சேர்க்க வந்தவர்கள் துண்டை காணோம் துணியினை காணோமென அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

No comments:

Post a Comment