Saturday, July 18, 2015
எம்மிடம் இனவாதிகள் இல்லை அந்த இனவாதிகள் அனைவரும் ஐதேகவில் இணைந்து விட்டனர், இனி அனைத்து இன மக்களுக்கும் உரிய நல்லாட்சியை ஏற்படுத்துவோம். என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று பிற்பகல் அனுராதபுரத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும், மத்திய வங்கியில் நடைபெற்றது ஊழல் அல்ல எனவும், அது பகற்கொள்ளையே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாம் நாட்டுக்கு உயிரூட்டும் திட்டத்தில் இணைந்துள்ளோம் நாட்டை அபிவிருத்தி பாதை நோக்கி இட்டுச்செல்வோம், கடந்த தேர்தலில் தேர்தல் முடிவு வருவதற்கு முன்னரே கௌரவமாக எனது கிராமமான மெதமுலன சென்றவன்.
நாம் வெற்றியைப் போன்று தோல்வியின் பொறுப்பையும் ஏற்க வேண்டும். புதிய மனிதனாகதான் உங்கள் முன்வந்திருக்கிறேன் சர்வதேச தொடர்புகளை கட்டி எழுப்புவோம். சகல இனங்களுடனும் புரிந்துணைர்வை ஏற்படுத்துவோம்.
இளைஞர்களே உங்களது எதிர்காலம் ரணிலிடமல்ல வாருங்கள் நாம் 18 வயதான சகல இளைஞர்களுக்கும் நாம் பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்துவோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.....

தீர்க்கமான அரசியல் முடிவு ஒன்றை எட்டுவதற்கு நாம் இங்கு கூடியுள்ளோம்.
நாட்டுக்கு வலுவூட்டும் பயணத்தை ஆரம்பிக்க உள்ளோம். யுத்தம் முடிந்து என்னை
வாழ்த்திய கைகளில்தான் கடந்த தேர்தலில் என்னை வீட்டுக்கும் அனுப்பி
வைத்தீர்கள். உலகமே அஞ்சிய தீவிரவாதத்தை தோற்கடித்தோம். அப்படியான நான்
சட்டமா அதிபர், பிரதம நீதியரசர் அனைவரையும் கொண்டுவந்து இராணுவ சூழ்ச்சி
செய்ததாக கேலி செய்தனர். ஆனால் தேர்தல் முடிந்து நான் எடுத்த முடிவை உலகமே
பாராட்டியது.
இதுவரை 892 அரச ஊழியர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பிரதமரின் செயலாளரை நெற்றியில் துப்பாக்கி வைத்து விசாரணை செய்தனர். அரச ஊழியர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். அந்த யுகத்தை நாம் முடிவுக்கு கொண்டு வருவோம். சில அரச ஊழியர்கள் அச்சத்தில் பதவி விலகிச் சென்றுள்ளனர். சீன அதிகாரிகளிடம் விசாரணை செய்தனர்.
அன்று பிரபாகரனிடம் மண்டியிட்ட இவர்கள் அதிகாரத்தில் இருக்கவென ஒப்பந்தம் செய்து கொண்டனர். பிரேமதாஸ புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதை மறக்க முடியாது. ஐதேக காலத்தில் நடந்த ஜேவிபி கலவரம் மற்றும் 600 பொலிஸார் கொல்லப்பட்டது நினைவு இருக்கிறதா? வடக்கில் இராணுவம் தோற்க இடமளித்துள்ளனர்.
நாடு ஹெரோயின் போதைப் பொருளால் நிறைந்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்க இடமளித்துள்ளனர். ஆனால் நாம் ஹெரோயின் பிடித்தோம். இதுபற்றி பேசிய தேரர்கள் எங்கே? அப்படி பேசியவர்கள் தேசிய பட்டியலில் உள்ளதாக நான் கூறவில்லை சுற்றி உள்ளவர்கள் கூறுகின்றனர். பிரபாகரன் என்னை அழிக்க நினைத்தார். ஆனால் இன்று ரணில் என்னை அழிக்க நினைக்கிறார். பிரபாகரனின் திட்டம் ரணிலின் திட்டமாக மாறியுள்ளதா?
வடக்கு கிழக்கிற்கு செல்ல இன்று பலர் அஞ்சுகின்றனர். அந்த அளவு நிலைமை மாறியள்ளது. இனவாதம் பேசியவர்கள் இன்று ஐதேக பக்கம் உள்ளனர். என் பக்கம் எந்தவொரு அடிப்படைவாதிகளும் இல்லை. நாட்டில் ஐக்கியத்தை கட்டியெடுப்ப வேண்டும். என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு மக்களே பதில் அளிக்க வேண்டும்.´ இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

No comments:
Post a Comment