Monday, July 27, 2015
தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் வேட்பாளர்களிடையே குடுமிப்பிடி சண்டை
உச்சமடைந்துள்ளது. அவ்வகையில் வட்டுக்கோட்டை தொகுதியில் தன்னை தவிர வேறு
எவரிற்கும் பிரச்சாரங்களைச் செய்யக்கூடாதென அப்பகுதி மகளிர் அமைப்புக்களினை
மிரட்டியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்:-
தொட்டிலடிப் பகுதியினைச் சேர்ந்த சில மகளிர் அமைப்புக்கள் கூட்டமைப்பின் அனைத்து வேட்பாளர்களையும் அழைத்து அறிமுக கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன. அதன்படி கூட்டமைப்பின் பத்து வேட்பாளர்களிற்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதி உள்ளுராட்சி மன்ற தலைவியாக இருந்து வரும் நாகரஞ்சனி ஜங்கரனின் கணவன் ஜங்கரன் தொடர்புபட்ட மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகளை தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு ஆபாசமாகப்பேசியுள்ளதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவனின் பினாமியாக செயற்படும் நாகரஞ்சனி மற்றும் அவரது கணவரது கொலை அச்சுறுத்தலையடுத்து நேரில் மகளிர் அமைப்பு பிரதிநிதிகளைத் தொடர்புகொண்ட சரவணபவன் தன்னை தவிர வேறு எவரையும் அழைக்க கூடாதென மிரட்டியதாகத் தெரியவருகின்றது.
இச்செய்தி தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற மகளிர் அமைப்பு பிரதிநிதிகளைத் தொலைபேசி வழித் தொடர்பு கொள்ள ஊடகவியலாளர்கள் முற்பட்ட போது அச்சம் காரணமாக தமது தொலைபேசிகளை செயலிழக்கச் செய்து வைத்திருந்ததாகத் தெரியவருகின்றது.

No comments:
Post a Comment