Monday, July 27, 2015
சண்டிகர்:பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு இடங்களில்
தீவிராதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 2 போலீசார் 7 பொதுமக்கள் என 9
பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் ராணுவ உடை அணிந்து வந்த 4 பயங்கரவாதிகள்
பேருந்து மற்றும் காவல் நிலையங்கள் என 2 இடங்களில் அதிரடியாக ஒரே
நேரத்தில் தாக்குதல் நடத்தினர்.
இதில் போலீஸ் காவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பொது மக்கள் 7 பேரும்,
போலீசார் 3 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். பயங்கரவாதிகள் தினாநகர் காவல்
நிலையத்தினையும் குறிவைத்து தாக்குதல் நடத்தினார்கள். மேலும் ரயில்
நிலையத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு,
அகற்றப்பட்டுள்ளன.
இதனால் ஜம்மு-அமிர்தசரஸ் இடையேயான ரயில் போக்குவரத்து நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை
எதிர்த்து போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில்
தொடர்ந்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெறுவதால் அங்கு பதற்றம்
நிலவுகிறது.

No comments:
Post a Comment