Thursday, June 18, 2015

மைத்திரி - மகிந்த மீண்டும் சந்திக்க ஏற்பாடு!!

Thursday, June 18, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் பிறிதொரு சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதன்பொருட்டு இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விசேட குழு சந்திக்கவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்று கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, மைத்திரி -மகிந்த இணக்கப்பாட்டுக்கென விசேட குழுவொன்று அமைக்கப்பட்டது.

இதன்படி, அந்த குழுவினர் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளது.

இந்த சந்திப்பின் போது, எதிர்வரும் தினத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், மகிந்த ராஜபக்ஸவையும் மீண்டும் சந்திக்க வைப்பது குறித்த பேசப்படவுள்ளதாக இந்த குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.              
           

No comments:

Post a Comment