Thursday, June 18, 2015
இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் வகையில், கடல் குறுக்கே 23 கி.மீ
தொலைவில் பாலம் கட்ட மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, மத்திய தரைவழிப்
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கடகரி
தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சார்க் நாடுகளான வங்க தேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் சாலை
போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு அண்மையில் ஒப்பந்தங்களை
மேற்கொண்டது. இந்த நாடுகளுடன் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சார்க் நாடான இலங்கையுடன் சாலை மற்றும் சுரங்கம்
மூலம் போக்குவரத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு
வருகிறது.
தமிழகத்தில் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னாரை இணைக்கும்
வகையில் 23 கிலோ மீட்டர் நீள பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடலுக்கு மேலே மற்றும் கடலின் கீழே சுரங்கம் அமைப்பது பாலம் கட்டுவது
குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
கடலுக்கு மேலே அமைக்கப்படும் பாலமானது "சார்க்" நாடுகளின் போக்குவரத்து துறையில் மிகப் பெரிய பங்களிப்பை ஆற்றும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment