Monday, June 15, 2015
பாராளுமன்றை கலைக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளன.
அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள்
இவ்வாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்க உள்ளனர்.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து இவ்வாறு கோரிக்கை விடுக்க உள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் இவ்வாறு கேரிரிக்கை விடுக்க உள்ளனர்.
வெகு விரைவில் இது தொடர்பிலான ஆவணமொன்றில் குறித்த உறுப்பினர்கள் கையொப்பமிட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆவணத்தில் சுமார் 150 உறுப்பினர்கள் கையொப்பமிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
19ம் திருத்தச் சட்டத்தின் சரத்துக்களின் அடிப்படையில் இவ்வாறு
பாராளுமன்றைக் கலைக்க முடியும் என ஆவணத்தில் சுட்டிக்காட்டத்
தீர்மானித்துள்ளனர்.
ஆவணத்தில் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கைகள் இந்த வாரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமையவும்
பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டியது அவசியமானது என
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
19ம் மற்றும் 20ம் திருத்தச் சட்டங்களை அமுல்படுத்துவதாகத் தெரிவித்து
பாராளுமன்றைக் கலைப்பது கால தாமதமாக்கப்பட்டு வருவதாக குறித்த பாராளுமன்ற
உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment