Thursday, June 18, 2015
ஜெ. வழக்கில் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய நீண்ட இழுபறிக்கு பிறகு கர்நாடக அரசு முடிவு செய்தது. அமைச்சரவையும் இம்முடிவுக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மேல்முறையீட்டின்போது சுப்ரீம்கோர்ட்டில் ஆஜராக ஆச்சாரியா, சந்தேஷ் சவுட்டா ஆகிய மூத்த வழக்கறிஞர்களை கர்நாடக அரசு நியமித்தது.
இந்நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் கோடை விடுமுறை முடிந்து வழக்கமான அலுவல்கள் ஜூலை முதல் வாரம் தொடங்க உள்ளன. எனவே, அவசரமாக மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று ஆச்சாரியா டீம் முடிவு செய்து பொறுமையாக மேல்முறையீட்டு மனுவை தயாரித்து வந்தது.
இந்த தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்த திங்கள்கிழமைக்குள் சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் பதவிக்கு ஆபத்து :
கர்நாடக சட்டத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: ஹைகோர்ட் தீர்ப்பிலுள்ள குளறுபடிகளை சுட்டிக் காட்டி, ஜெயலலிதாவை மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தி்ல் இருந்து தகுதி நீக்கம் செய்ய கேட்க உள்ளோம்.
இந்த கோரிக்கை சுப்ரீம்கோர்ட்டால் ஏற்கப்பட்டால், ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து இறங்க வேண்டிவரும்.
தீர்ப்புக்கு தடை :
மேலும், ஹைகோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்துவிட்டு, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் செல்லும் என்று கேட்க உள்ளோம். வழக்கு முடியும்வரையாவது ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை கேட்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment