Wednesday, May 20, 2015
இரண்டு அரச தலைவர்கள் உள்ளிட்ட பத்து பேருக்கு எதிராக போர்க் குற்றச் செயல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் இரண்டு அரச தலைவர்கள், முன்னாள் இரண்டு அரச அதிகாரிகள் மற்றும் ஆறு உயர் படையதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக நேற்று இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு கடந்த புலிகளின் தமிழீழ இராச்சியத்தினால், ஜெனீவா போர்க் குற்றவியல் விசாரணைக் குழுவிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, படைகளின் கூட்டுத் தளபதி ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, முன்னாள் கடற்படைத் தளபதிகளான திசர சமரசிங்க, வசந்த கரன்னாகொட உள்ளிட்டோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொலை கார புலிகளின் தலைவர் பிரபாகரனின் சட்ட ஆலோசகராக செயற்பட்ட வீ.ருத்ரகுமாரன் இந்த முறைப்பாட்டை அனுப்பி வைத்துள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment