Saturday, January 3, 2015

காத்தான்குடியில் கைக்குண்டு வீச்சுக்கள்! யாழ்.நாவாந்துறை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயம்!

இலங்கை::நேற்றைய தினம்  காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் ஏற்பாட்டாளார்கள் வீடுகள் மீது இன்று அதிகாலையிலிருந்து கைக்குண்டுகள் வீசப்பட்டன.
 
இதன் காரணமாக வீட்டின் பகுதிகள் சேதமடைந்திருக்கின்றன.  தொடர்ந்தும் காத்தான்குடி பதட்டத்தில் காணப்படுகிறது.
 
யாழ்.நாவாந்துறை பகுதியில் நேற்று இரவு மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயம்.

நாவாந்துறையில் உள்ளுர் விளையாட்டுக்கழக உறுப்பினர்களிடையேயான தொடர் மோதலை கட்டுப்படுத்த   துப்பாக்கி சூட்டினை நடத்தியுள்ளனர்.
 
இத்துப்பாக்கி சூட்டில் அதே இடத்தை சேர்ந்தவரான 30 வயதுடைய சந்திரகுமார் சண்சிவன் என்பவரே காயமடைந்துள்ளார்.
 
 

No comments:

Post a Comment