Tuesday, January 06, 2015
இலங்கை::இனவாதிகளிடம் மக்களை விற்று பணம் சம்பாதித்த தமிழ்த் தேசியக் கூட்டமைபின் பேச்சை நம்பி மைத்திரிக்கு வாக்களிப்பதற்கு தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்ல என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்தராஜபச்ச அவர்களை ஆதரித்து நேற்று பூநகரி முழங்காவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
முப்பது வருட கொடிய யுத்தத்தில் பாரிய இழப்புக்களை எதிர்கொண்ட எம் மக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்திருக்கின்றனர். பல உயிரிழப்புக்களை சந்தித்ததோடு மக்கள் சிறுகச்சிறுக சேமித்த சொத்துக்களையும் இழந்திருக்கின்றார்கள். பலர் விதவைகளாக்கப் பட்டிருக்கின்றனர். பலர் அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்று அந்த நிலைமையிலிருந்து மக்கள் மீண்டுள்ளனர். மீளவும் பொலிவிழந்த ஊர்கள் எல்லாம் செழிப்புற்று வருகின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. அத்தோடு மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் கருதி பல வாழ்வாதாரத் திட்;டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு எமது பிரதேசங்களிலும் எமது மக்களின் வாழ்நிலைகளிலும் ஏற்பட்ட மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் காரணம் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்களே.
அவர் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட காலத்தில் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியிருக்கின்றார். அதில் யுத்த இழப்புக்களை சந்தித்த மக்களுக்கு உயிரிழப்புக்களைத் தவிர ஏனைய அனைத்தையும் தருவதாக உறுதியளித்த அவர் அதனை நிறைவேற்றியிருக்கின்றார். ஆகவே எதிர்காலத்தில் எமது தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வுகளையும் பெறக்கூடிய தலைவராக அவர் மட்டுமே திகழ்கின்றார்.
ஆனால் ஒட்டுமொத்த இனவாதிகளின் கூட்டு எமக்கு எந்தத் தீர்வுகளையும் வழங்க முன்வர மாட்டாது. மாறாக எமது மக்களின் பிரச்சினைகளை மேலும் பூதாகாரப்படுத்தவும் மக்களின் அரசியல் உரிமை தொடர்பான விடையத்தை கருத்தில் கூட எடுக்காத நிலையே உருவாக்கும் வகையிலுமே அவர்கள் செய்படுவார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்த ஆட்சிக்கால வரலாறு அதனையே வெளிப்படுத்துகின்றது. தமிழ் மக்கள் மீது இன அழிப்புக்களும் இன அடக்கு முறைகளும் மேற்கொள்ளப்பட்டதோடு எம்மை ஆயுதமேந்தும் அளவுக்கு அடக்கு முறைகளுக்கு உற்படுத்தியதும் அந்தக்கட்சியின் ஆட்சிக்காலத்தில்தான். விடுதலைப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு காரணமாக செயற்பட்ட அனைத்து இனவாதிகளும் இன்று மீண்டும் ஒன்று திரண்டுள்ளார்கள். அவர்கள் மீளவும் எமது மக்களின் வாழ்வை சீர்குலைக்கும் சதித்திட்டத்துடனேயே அணிதிரண்டுள்ளனர்.
இது பௌத்த சிங்கள நாடு தமிழர்கள் வந்தேறு குடிகள் என்ற இனவாதத்தைக்கக்கும் ஜாதிக ஹெலஉறுமய என்ற கட்சியும் மற்றும் கடந்தகாலங்களில் பல படைநடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை இடப்பெயர்வுகளுக்கும் இருப்பிடம் கூட இன்றி அவர்களைத் தெருத்தெருவாக அலைய வைத்த சந்திரிகா அம்மையாரும் தமிழ் மக்கள் மீது குண்டு மழைபொழிந்து வயது வேறுபாடின்றி அழித்துதொழித்த சரத்பொன்சேகாவும் மற்றும் இறுதிக்கட்ட யுத்தத்திற்கு பிரதிப்பாதுகாப்பு அமைச்சராக இருந்து கட்டளைகளை பிறப்பித்த மைத்திரியும் மற்றும் பலரும் தான் இந்தக் கூட்டுக்குள் உள்ளடங்குகின்றனர். அவர்களின் தேர்தல் விஞ்ஞாபணம் கூட தமிழர்களின் குறைந்தபட்ச அதிகாரங்களையும் பறித்தெடுப்பதாக குறிப்பிடுகின்றது.
இந்த நிலையில்தான் தமிழ் மக்களை அழித்த இந்த இனவாத சக்திகளுக்கு வாக்களிக்குமாறு தமிழ்தேசியக் கூட்டமைப்பு மக்களை கோருகின்றது. தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் தாங்களே எனவும் தமிழ்மக்களின் உரிமைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் சக்தி தாங்களே என இனம்காட்டிக்கொண்டிருக்கின்ற தமிழத்; தேசியக் கூட்டமைப்பு எந்த கொள்கையின் அடிப்படையில் தமிழர்களை அழிக்கத்திரண்டிருக்கும் கூட்டுக்கு ஆதரவு வழங்க முடியும். தாங்கள் எதைச் சொன்னாலும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற மூட நம்பிக்கையின் அடிப்படையில் மாவை சேனாதிராஜா சுமந்திரன் சம்மந்தன் ஆகிய மூவரும் கூடி அந்த இனவாத கும்பலிடம் மக்களின் வாக்குகளை விற்றுவிட்டு சொத்துக்களையும் பணத்தைப்பெற்றுக்கொண்ட பின் எடுத்த தீர்மானத்தை இன்று மக்கள் மத்தியில் வற்புறத்தி திணிக்க முனைகின்றார்கள் இது மக்களுக்கு செய்த பாரிய துரோகம் இல்லையா,
இவர்கள் தான் கடந்தகாலங்களில் தமிழ் மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுத்தரப்போவதாக கூறி பத்தரிகை அறிக்கைகளை வெளியிட்டும் மேடைப்பேச்சுக்களின் முழங்கியும் வந்தார்கள். இன்று அவர்களின் முகமூடி கிழித்தெறியப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான மாபெரும் துரோகிகளாக அவர்கள் இன்று இனம்காணப்பட்டுள்ளார்கள்.
எனவே இனத்தின் தனித்துவத்தைவிற்று சம்பாதிக்கும் அந்தத் துரோகிகளினதும் அவர்களுக்கு துணை போய்கொண்டிருப்பவர்களின் பேச்சுக்களையும் நம்பி மக்கள் ஏமாந்து போகாமல் தமது எதிர்கால சந்ததியினரின் நன்மைகருதி சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு பயணிப்பதற்காக மகிந்தராஜபக்ச அவர்களுக்கு வாக்களிக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment