Wednesday, January 7, 2015

நாட்டின் எப்பாகத்திலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு ஊர்வலங்கள், இன்றும் நாளையும் தடை!

Wednesday, January 07, 2015
இலங்கை::
ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல பிரச்சார நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ள நிலையில் இன்றும் (7) நாளையும் (8) நாட்டின் எப்பாகத்திலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு ஊர்வலங்கள், நடைபவனிகள் எந்வொன்றையும்  நடாத்துதல் தடை செய்யப்பட்டுள்ளதாக
 
தேர்தல்கள் ஆணையாளர் சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளார்.
 
அதேபோன்று, கட்சியையோ, அபேட்சகர்களையோ ஆதரிக்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
 
தனியான ஒரு வேட்பாளரை ஆதரித்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்பினால், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் ரத்து செய்யப்படும் அரச ஊடகங்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் விசேட அறிவிப்புச் செய்துள்ளதாகவும்  அறிவித்துள்ளது.  

No comments:

Post a Comment