Thursday, January 01, 2015
இலங்கை::நாட்டில் நடைமுறையிலுள்ள அபிவிருத்தி திட்டங்கள்
முன்னோக்கி கொண்டு செல்லப்பட வேண்டும் என பாதுகாப்பு மற்றும் நகர
அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று
(ஜன.01) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற புதுவருட கொண்டாட்ட நிகழ்வில்
தெரிவித்தார்.
பாதுகாப்புச் செயலாளர் மேலும் இங்கு உரையாற்றுகையில் அரச
ஊழியர்கள் என்ற வகையில் எம்மால் நாட்டின் அபிவிருத்திக்கு அளப்பரிய சேவை
வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் அதிக
அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதாகவும் கடந்த வருடம் பாதுகாப்பு
அமைச்சின் சகல பிரிவுகளாலும் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு
சிறந்த பெறுபேறு கிடைத்துள்ளதாகவும் சுட்டிக் காட்டினார் அது தொடர்பில்
சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தனது நன்றியையும்தெரிவித்துக் கொண்டார்
அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் சேவையாற்றும் அதிகாரிகள்
மற்றும் அவர்களது குடும்பத்தினர், பிள்ளைகள் அனைவருக்கும் புது வருட நல்
வாழ்த்துக்களையும் செயலாளர் பரிமாரிக் கொண்டார்.
இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின்
தலைவி திருமதி. அயோமா ராஜபக்ஷ, அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்
ஹெட்டியாராச்சி, இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல்.பாலித பிரநாந்து,
தேசிய புலனாய்வுத் துறை பிரதானி மேஜர் ஜெனரல் கபில ஹென்தவிதாரன உற்பட
பாதுகாப்பு அமைச்சின் சகல பிரிவுகளிலும் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும்
ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment