Wednesday, January 07, 2015
இலங்கை::ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட பிரித்தானியாவின் புலிகளின் ஆதரவு செனல் 4 ஊடகத்திற்கு. வெளிவிவகார அமைச்சு அனுமதி மறுத்துள்ளது.
இலங்கை::ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட பிரித்தானியாவின் புலிகளின் ஆதரவு செனல் 4 ஊடகத்திற்கு. வெளிவிவகார அமைச்சு அனுமதி மறுத்துள்ளது.
கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களைக் கூறி நாட்டுக்குள் பிரவேசித்த செனல்4 ஊடகம், இலங்கைக்கு விரோதமான ஆவணப்படங்களை தயாரித்துள்ளது என வெளிவிவார அமைச்சு அறிவித்துள்ளது.
போலி ஆவணப்படங்களின் மூலம் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் அபகீர்த்தி
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்குள் பிரவேசிக்க செனல்4 ஊடகத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்குள் பிரவேசிக்க செனல்4 ஊடகத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை,இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட அதிகளவான இந்திய ஊடகங்கள் அனுமதி கோரியுள்ளன. ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளும் தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிக்க அனுமதி கோரியுள்ளன.
ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து அதன் பின்னர் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கைக்கு வரும் சில ஊடக நிறுவனங்கள் பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பிலான செய்தி சேகரிப்பிற்காக தொடர்ந்தும் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது
No comments:
Post a Comment