Friday, January 2, 2015

யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து 14000 தேர்ச்சியுடைய ஊழியப்படைகளே அபிவிருத்தி திட்டங்களில் ஈடுபட்டுள்ளன!

Friday, January 02, 2015
இலங்கை::யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து 14000 தேர்ச்சியுடைய நபர்கள் இராணுவத்தில் பல துறைகளில் நேரடியாக உள்வாங்ப்பட்டுள்ளார்கள் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருதி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

மேலும் அவர், 10000 திற்கு மேற்பட்ட திறன்வாய்ந்த நபர்கள் இராணுவத்திலும் 11000 திற்கு மேற்பட்ட நபர்கள் சிவில் பாதுகாப்பு படையிலும் இணைக்கப்பட்டனர் இவர்கள் அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு 2009 ஆம் ஆண்டிலிருந்து 35000 த்திற்கு மேற்பட்டோர் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வேலைத் திட்டங்களில் சேவையாற்றுகின்றனர் என்று கூறினார்.

இவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களைப் பற்றி பிரிகேடியர் விளக்கமளிக்கையில் மனிதாபிமான நடவடிக்கைளில் பங்களிப்புச் செய்த இராணுவ அதிகாரிகளின் கண்கானிப்பின் கீழ் வழி நடாத்தப்படுவதோடு யுத்த வெற்றிக்கு பங்களிப்புச் செய்த இராணுவ வீர்ரகள் அபிவிருத்தி திட்டங்களில் முகாமைத்துவ மற்றும் தலைமைத்துவ பணிகளில் ஈடு படுத்தப்பட்டதை தவிர வேறு எந்த வித நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்பட வில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை இராணுவத்தின் சிவில் பரிபாலன அதிகாரி திரு.காமின் மஹகமகே இவ்வாறு இராணுவத்திற்க்கு உள்வாங்கப்பட்ட நபர்களுக்கு சிறந்த தெழிற் பயிற்சிகள் வழங்ப்பட்டதுடன் அவர்களுக்கான நலன்புரித்திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறினார்.

அத்துடன் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 2015 வரவு செலவுத் திட்டத்தின் அடிப்படையில் - ஒப்பந்த அடிப்படையில் சேவை செய்த 3000 சிவில் உறுப்பினர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப் பட்டு சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மேலும் கடற்படையில் தேர்ச்சி பெற்ற 10000 நபர்கள் இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்கெடுக்கும் வகையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு படையினர் தமது தகுதிகளுக்கு பொருத்தமில்லாத வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாக சில நபர்களினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உன்மையற்றவை என்றும் பிரிகேடியர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment