Saturday, December 27, 2014
இலங்கை::பிரதான இரு வேட்பாளர்களையும் 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளினைப் பெற வைப்பதன் மூலம் அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை தடுக்கமுடியுமென தெரிவித்துள்ளார் ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவரும் ஐனாதிபதி வேட்பாளருமான சிறிதுங்க ஐயசூரிய.
இலங்கை::பிரதான இரு வேட்பாளர்களையும் 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளினைப் பெற வைப்பதன் மூலம் அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை தடுக்கமுடியுமென தெரிவித்துள்ளார் ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவரும் ஐனாதிபதி வேட்பாளருமான சிறிதுங்க ஐயசூரிய.
எதிரணி
வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதென்பதையும் ஏற்றுக்கொள்ள
முடியாது. கடந்த 1994 ஆம் ஆண்டும் இதே போன்றதான கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று
வந்த நிலையிலையே மாற்றம் ஏற்பட்டு மக்களுக்கு விடிவு வேண்டுமென்று
ஐனாதிபதியாக சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.
ஆனால் சந்திரிக்கா வந்தும் எந்தவித விடிவும் கிடைக்கவில்லை.
மகிந்த தோல்வியுற்று மைத்திரிபால வந்தாலும் எந்த
விடிவும் கிடைக்கப்போவதில்லை, அகவே மக்கள் சிந்தித்துச் செயற்பட
வேண்டும். அதனால் தான் இதற்கு மேற்படி இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் 50
வீதமான வாக்குகளை அளிக்காமல் விடுவதே காலத்தின் தேவையாகும்.
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர் ஒருவர் 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக் கொள்ள
வேண்டும். இந்த நிலையில் மேற்படி இரண்டு பிராதான வேட்பாளர்களையும்
நிராகரித்து 50 வீதமான வாக்குககள் கிடைக்காமல் தமிழ், முஸ்லிம், மலையக
மக்களினது வலுவினை தெரியப்படுத்துவோம் எனவும் சிறிதுங்க ஐயசூரிய
தெரிவித்தார்.
ஐக்கிய சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ் பிரதான வீதியிலுள்ள
பஸ்ரியான் ஹோட்டலில் நேற்று மாலை நடாத்தப்பட்ட ஊடகவியியலாளர் சந்திப்பின்
போதே மேற்படி கட்சியின் தலைவரும் ஐனாதிபதி வேட்பாளருமான சிறிதுங்க ஐயசூரிய
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையும் அமர்த்தி எமக்கு ஏதுமே
கிடைக்கப் போவதில்லை.
மைத்திரி தன் தேர்தல் விஞஞாபனத்தில் கூட தமிழ் மக்கள் பிரச்சனைகள்
தீர்க்கும் திட்டம் தொடர்பில் ஏதுமே தெரிவிக்கவில்லை.
ஆனாலும் சந்திரிகாவை கொண்டு வந்து ஏமாந்தது போல் மைத்திரியையும் கொண்டு
வந்து ஏமாறக் கூடாது. ஆகவே சிந்தித்து வாக்களிக்க வேண்டுமெனக்
கோருகின்றேன். மகிந்த – மைத்திரி இந்த இரண்டு பேருடைய போட்டியும்
பெரும்பான்மை சிங்கள மக்களை மையப்படுத்தியே மேற்கொள்ளப்படுவதை
காணமுடிகிறது. என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment