Saturday, December 27, 2014

கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தனால் உணவுப்பொதிகள்!

 Saturday, December 27, 2014
இலங்கை::நாடு பூராகவும் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பல மாகாணங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தமது சொந்த இடங்களில் இருந்து நிவாரண முகாம்களுக்கு தற்காலிகமாக இடம் பெயர்ந்துள்ளனர்.
 
மேலும் இவ்வாறு இடம்பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முப்படையினர் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவ படைப்பிரிவுகளினால் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப் பட்டது.
 
இதற்கிணங்க கிழக்கு பாதுகாப்புப் படைத் தலமையகத்திற்குற்பட்ட மட்டக்களப்பில் அமைந்துள்ள 12 வது கஜபா படைப்பிரிவினால் மன்முனை வடக்கு நொச்சிமுனை பிரதேசத்தில் இடம் பெயர்நத 75 பேருக்கு டிசம்பர் 23 ஆம் திகதி உணவுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன் 23 ஆவது பிரிவிற்குற்பட்ட 12 வது பீரங்கி படைப்பிரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20, 21, 22, 23 ஆம் திகதிகளில் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன
 
மேலும் இலங்கை இராணுவத்தின் 23 ஆவது பிரிவற்குற்பட்ட 24 வது தேசிய காவல் படைப்பிரிவினால் வடுமுனை மற்றும் ஊத்துச்சேனை பிரதேசத்தில் இடம் பெயர்ந்த மக்களுக்கு அரிசி, சீனி பருப்பு, படுக்கை விரிப்புக்கள் மற்றும் பாய்களும் டிசம்பர் 24 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன, அத்துடன் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குற்பட்ட பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிந்தவூர் பள்ளிவாசல் நிர்வாகத்துடன் இணைந்து 5000 உணவுப் பொதிகள் 241 படைப்பிரிவினால் வழங்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment