Saturday, December 27, 2014
இலங்கை::ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தலைவர் ஹக்கீம் தலைமையில் இன்று அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது உறுதியென கட்சி முக்கியஸ்தர் ஒருவர் டெய்லி தெரிவித்தார்.
இலங்கை::ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தலைவர் ஹக்கீம் தலைமையில் இன்று அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது உறுதியென கட்சி முக்கியஸ்தர் ஒருவர் டெய்லி தெரிவித்தார்.
கடைசி நேரத்தில், ரவூப் ஹக்கீம் உட்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இன்று காலை அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் 45 நிமிடங்கள் அளவில் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருப்பதாகவும் தெரிய வருகின்றது.
இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து இன்று பிற்பகல் அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (27/12/2014) காலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நீதியமைச்சயமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்த கட்சியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், தலைவர் எடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் தான் கட்டுப்படுவதாக மீண்டுமொருமுறை 'பைஅத்' செய்து கொண்டார்.
இதற்கு முன்னரும் குறித்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே பல சந்திப்புக்கள் இடம்பெற்ற போதும் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment