Wednesday, December 24, 2014
இலங்கை::வெள்ள அனர்த்தம் பாதிப்புகளை எதிர்கொண்ட பகுதிகளில் சுகாதார பிரிவுகளினால் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட வாகரையில் உள்ள முகாம்களில் சுகாதார பிரிவினரால் இந்த நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
வாகரை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.திசாநாயக்க தலைமையில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் சந்திரமோகன் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,குடும்ப நல உத்தியோகத்தர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வாகரை பிரதேசத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள முகாம்களில் தீவிர சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக வாகரை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.திசாநாயக்க தெரிவித்தார்.
இதன்போது முகாம்களில் உள்ள கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் வயோதிபர்கள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
36 வாரங்களைக்கொண்ட கர்ப்பிணிப்பெண்கள் முன்னெச்சரிக்கையாக வாகரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.அத்துடன் 65 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களின் உடல் நிலைகளைப்பொறுத்து வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டன.
அத்துடன் முகாம்களில் உள்ள குடிநீர்கள் மற்றும் மலசல கூடங்களில் சுகாதார நிலைமைகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரையில் எதுவித தொற்று நோய்களோ,வேறு நோய்களோ ஏற்படவில்லையெனவும் வாகரை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.திசாநாயக்க தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட படுவான்கரை பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைப்பு: பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் !
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இதன்கீழ் பட்டிப்பளை மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுகளில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான படுக்கை விரிப்புகள் மற்றும் பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் எட்டு முகாம்களில் தங்கியுள்ள சுமார் 1200 குடும்பங்களுக்கும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ஆறு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள சுமார் 800குடும்பங்களுக்கான பொருட்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேரடியாகச்சென்று இந்த பொருட்களை வழங்கிவைத்தார்.
இதன்போது முகாம்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் முகாம்களில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துவைக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை வழங்கினார்.
அத்துடன் முகாம்களில் மக்களுக்கு சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொடுக்கவும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கைகளையும் பிரதியமைச்சர் மேற்கொண்டார்.

No comments:
Post a Comment