Friday, December 26, 2014
இலங்கை::படையினருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் துரோகம் இழைக்க எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை::படையினருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் துரோகம் இழைக்க எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
படையினரையும், ஜனாதிபதியும் சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு உட்படுத்துவதாக உறுதியளித்தே மைத்திரிபால சர்வதேச ஆதரவினைப் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அகலவத்த பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நூறு நாட்களில் படைவீரர்களுக்கு துரோகம் இழைப்பதே மைத்திரிபாலவின் திட்டமாக அமைந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான ஓர் தலைவர் நாட்டுக்கு அவசியமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டு ஊடகங்களுக்கு மைத்திரிபால சிறிசேன வாக்குறுதிகளை அளித்துள்ளதாகவும், இணையத்தின் ஊடாக இந்த தகவல்கள் அம்பலபமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசத்தையும் படைவீரர்களையும் பாதுகாக்க வேண்டியது முதன்மையானது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment