Thursday, December 25, 2014
இலங்கை::நான் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவளிப்பதாக கூறி எனக்கெதிராக இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளை இன்று பல இணையத்தளங்கள் வெளியிட்டு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்த கொண்டதை நான் வண்மையாக கண்டிக்கின்றேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார்.
இலங்கை::நான் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவளிப்பதாக கூறி எனக்கெதிராக இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளை இன்று பல இணையத்தளங்கள் வெளியிட்டு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்த கொண்டதை நான் வண்மையாக கண்டிக்கின்றேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார்.
புதன்கிழமை (24) அக்கரைப்பற்றிலுள்ள அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்களிடையே எனக்கு இருக்கின்ற செல்வாக்கையும், ஆதரவையும் இல்லாமல் செய்வதற்கும் தமிழ் பிரதேசங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக உழைத்து வருகின்றவன் என்ற வகையிலும். ஜனாதிபதிக்கும் இந்த அரசாங்கத்துக்கும் என் மீது இருக்கின்ற நம்பிக்கையையும் நன்மதிப்பையும் இல்லாமல் செய்வதற்காக ஒரு சில தீய சக்திகள் இன்று பொய்யான செய்திகளையும் பிரச்சார நடவடிக்கையிலும் ஈடு பட்டு வருகின்றனர்.
எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 25 இலட்சம் மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படவுள்ளார் என்பதையும் இன்னும் பல ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்யக்கூடிய தகுதியும் தராதரமும் அவருக்கே உண்டு என்பதையும் இந்த இடத்தில் நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
அன்று தொட்டு இன்று வரை மக்கள் மத்தியில் இனவாதங்களை பேசிப் பேசி தமிழ் சமூகத்தை பிழையான பாதையில் வளி நடாத்திக் கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியினரின் இனவாத போக்கர்களின் போக்குகளும், செயற்பாடுகளும் எனக்கு பிடிக்காமையினால் அந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியிலிருந்து பிரிந்து தமிழ் மக்களின் விடிவுக்கான சரியான பாதையினை நான் தெரிவு செய்து அதில் பயனிப்பதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை இனம் கண்டு அன்று அந்த அரசுடன் இணைந்து கொண்டு கைகோர்த்தவனாக இன்றுவரையும் செயற்பட்டு வருகின்றேன்.
முப்பது வருட காலம் எனது சமூகம் அனுபவிக்காத கல்வி மற்றும் உட்கட்டமைப்பு ரீதியான பல்வேறு பட்ட அபிவிருத்தி வேலைகளை தற்போது இந்த அரசாங்கத்தின் ஊடாக எனது சகோதர உடன் பிறப்புக்கள் அனுபவிக்கும் வகையில் எனது தமிழ் மக்களுக்காக பல்வேறுபட்ட அபிவிருத்திகளை செய்து வருகின்றேன்.
இந்த நாட்டில் புரையோடிப்போய் இருந்த கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து தமிழ் சமூகம் மாத்திரமின்றி இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்தின மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய ஒரு சூழ் நிலையை உருவாக்கி மீண்டும் ஒரு முறை இந்த நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை இல்லாமல் செய்வதற்கும் அந்த அரசாங்கத்தினூடாக தமிழ் பிரதேசங்களில் மாத்திரமின்றி சகோதர இணங்களான சிங்கள, மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் தான் மேற்கொண்டுவருகின்ற அபிவிருத்தி வேலைகள் காரணமாக.
மூவின சமூகத்தின் மத்தியில் எனக்கு இருக்கின்ற அரசியல் ஆதரவினையும் செல்வாக்கையும் பொறுக்க முடியாதவர்கள் இன்று என்மீது இவ்வாறான கீழ்த்தரமான அப்பட்டமான பொய்ச் செய்திகளை வெளியிட்டு எனக்கு மக்கள் மத்தியில் இருந்து வருகின்ற செல்வாக்கை இல்லாமல் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் என்னை அரசியல் ரீதியாக பலமிளக்கச் செய்யலாம் என்று என்னுகின்றவர்களின் கனவு ஒரு போதும் பலிக்காது என்று இந்தச் சந்தர்பத்தில் மீண்டுமொரு முறை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்;.
நான் பணத்திற்காக ஒரு போதும் சோரம் போனவனுமல்ல சோரம் போக வேண்டிய அவசியமும் எனக்கில்லை. நான் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட்டோ அல்லது இந்த அரசாங்கத்தை விட்டோ ஒருபோதும் விலகிச் செல்லமாட்டேன். அவ்வாறான அரசியல் வியாபாரம் செய்யும் கீழ்த்தரமான செயற்பாட்டை செய்து மக்களை ஏமாற்றி பிழைக்கின்ற அரசியல் செய்கின்றவன் நானல்ல.
அவ்வாறு நான் நடப்பதாக இருந்திருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்திருப்பேன். இன்று அமெரிக்கா போன்ற நாடுகள் எதிர்கட்சியினரை தனது கைக்குள் வைத்துக் கொண்டு இந்த அரசாங்கத்தை பலமிளக்கச் செய்து மீண்டுமொரு பயங்;கரவாத நிலமையை இந்த நாட்டில் தோற்வித்து நாட்டை சின்னாபின்னமாக்கி தங்களிடையே விற்பனை செய்யப்படாமல் தேங்கிக்கிடக்கின்ற ஆயுதங்களை விற்பனை செய்து அதன் மூலம் இலாபம் அடைவதற்கான முயற்சியில் ஏங்கிக் கொண்டிருந்த நாடுகளுக்கு ஒரு சாதகமான ஒரு அரசாங்கத்தை இந்த நாட்டில் உருவாக்குவதற்கான முயற்சியில் அமெரிக்கா நோர்வே போன்ற நாடகளுடன் புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் மற்றும் டயஸ் போறாக்கள் போன்றோர் சதி திட்டங்களை வகுத்து வருகின்றனர்.
இந்த கடும் போக்கர்களின் என்னத்தினால் எமது நாட்டில் மீண்டும் ஒரு பயங்கரவாத சூழலை உருவாக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறானவர்களிடம் இருந்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் இச்சந்தர்ப்பத்தில் இந்த அரசாங்கம் மக்களை பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இனமத வேறுபாடுகள் அற்ற முறையில் வாழ வைத்து வரும் அரசாங்கத்தை விட்டு நான் ஒரு போதும் விலக வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் தொடர்ந்தும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக உழைத்து வருகின்றவன் என்றவகையில் என்னை ஒரு போதும் இந்த அரசாங்கத்தில் இருந்து பிரிக்க முடியாது என்று மீண்டும் ஒரு முறை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
No comments:
Post a Comment