Friday, December 26, 2014
மாஸ்கோ::உக்ரைன் நாட்டின் கிழக்கே உள்ள கிரிமீயா பகுதி சமீபத்தில் வாக்கெடுப்பு மூலம் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள பல்வேறு நகரங்களை ரஷ்ய ஆதரவாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். உக்ரைன் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ரஷ்யா மறைமுக
ஆதரவு அளித்து வருகிறது. உக்ரைன் கிழக்கு பகுதியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர் என்று உக்ரைன் ராணுவம் குற்றம்சாட்டி வருகிறது.உக்ரைன் அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை கொண்டு வந்தன. இதன் காரணமாக உக்ரைனுக்கு இயற்கை எரிவாயு சப்ளையை ரஷ்யா நிறுத்தியது. பின்னர் ஐரோப்பிய நாட்டின் கூட்டமைப்பின் உத்தரவாதத்தில் எரிவாயு சப்ளையை மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில், நேட்டோ நாடுகளின் வரிசையில் உக்ரைன் நாட்டை இணைப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் முயன்று வருகின்றன. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் நாட்டை சேர்ப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் முயன்று வருகின்றன. உக்ரைனை சேர்ப்பதன் மூலம் அட்லாண்டிக் நாடுகளின் கூட்டமைப்பில் பல்வேறு ஆபத்தான சூழ்நிலைகள் உருவாகும். அதனால் நேட்டோ நாடுகளின் வரிசையில் உக்ரைன் நாட்டை சேர்க்கக்கூடாது என்று ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்றிரவு மாஸகோவில் கூறினார்
No comments:
Post a Comment