Sunday, December 28, 2014

ஒபாமாவை குரங்குடன் ஒப்பிட்டு வட கொரியா விமர்சனம்!!

Sunday, December 28, 2014
பியாங்கியாங்::தமது நாட்டின் இணையதள சேவைகளை அமெரிக்கா முடக்கியதாக குற்றம்சாட்டி, 'வெப்ப மண்டலக் காடுகளில் உலவும் குரங்குதான் ஒபாமா' என்று வட கொரியா பாதுகாப்பு ஆணையம் விமர்சித்துள்ளது.

வட கொரியாவின் இணைய சேவைகள் கடந்த சில நாட்களாக அவ்வப்போது முடங்கிய வண்ணம் இருந்தன. இந்த முடக்கத்துக்கு அமெரிக்காதான் காரணம் என்று வட கொரிய பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், இதற்குக் காரணம் அமெரிக்க அதிபர் ஒபாமா என்று குறிப்பிட்ட வட கொரிய பாதுகாப்பு ஆணையம், அவரை 'வெப்பமண்டலக் காட்டில் உலவும் குரங்கு' என்றும் விமர்சித்துள்ளது.
 
இந்த விமர்சனத்துக்கு அமெரிக்கா தரப்பிலிருந்து எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
கொரியா பிரிவுக்கு பின்னர் 1953 முதல் அமெரிக்கா - வட கொரியா இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. தற்போது அமெரிக்காவும் வட கொரியாவும் சைபர் வழியிலான மோதலில் ஈடுபட்டு வருகிறது.

No comments:

Post a Comment