Monday, December 29, 2014
இலங்கை::நாட்டில் பல மாவட்டங்களில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மற்றும் இடம் பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்காள மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் மற்றும் உணவுகளை வழங்குமாறு ஜாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.
இலங்கை::நாட்டில் பல மாவட்டங்களில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மற்றும் இடம் பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்காள மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் மற்றும் உணவுகளை வழங்குமாறு ஜாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள அரசியல் வாதிகளுக்கு அரசியல் நடவடிக்கைகளை ஒருபுரம் தள்ளி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய அனர்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாணமளிக்கும் வகையில் பல மில்லியன் ருபா அரச நிருவணங்களினால் ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
வடக்கு, வடமேற்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, சபரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்ளில் 18 மாவட்டங்களுக்குற்பட்ட 272,820 குடும்பங்களைச் சேர்நத 989,214 நபர்களும் 25,222 குடும்ங்களைச் சேர்ந்த 86,845 நபர்களும் 459 தற்காலிக நலன்புரி மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அத்துடன் 17 பேர் இறந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர், 12 பேர் காணாமல் போயுள்ளனர், 200,00 க்கும் அதிகமான விவசாய நிலங்கள் நாசமாகியுள்ளன, 4261 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதன, 13253 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய அம்பாரை மாவடத்தில் 73,000 குடும்பங்களைச் சேர்நத 280,000 நபர்கள் இடம் பெயர்ந்துள்ளதுடன் இவர்களுக்கு மருத்துவ நிவாரணங்கள் உள்ளடங்கலாக சமைத்த உணவுகள், உலர் உணவுகள் மற்றும் நிவாரண உதவிகளுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் அநுராதபுர மாவட்டத்தில் 23 பிரதேச செயலகங்களுக்குற்பட்ட பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் அதிலும் அநுராதபுர நகரம், கஹடகஸ்திகிலிய, நாச்சியாதீவு, தந்திரிமலை, ஹொரவபொதான, கலன்பிதுனுவெவ, திரப்பனை ஆகிய 11 பிரதேங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அநுராதபிர சிறைச்சாலையை சேர்நத 1000 கைதிகள் வாரியபொல, வவுனியா, திருகோணமலை மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5978 குடும்பங்களைச் சேர்ந்த 20742 பேர் 72 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் மேலும் 43,256 குடும்பங்களைச் சேர்நத 153,021 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
No comments:
Post a Comment