Wednesday, December 3, 2014

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த வாரம் இந்தியா வருகை!

Wednesday, December 03, 2014
புதுடெல்லி::ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார். அவரை சிறப்பாக வரவேற்று கவுரவிக்க மத்திய அரசு விசேஷ ஏற்பாடுகளை செய்து வருகிறது.
 
டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விளாடிமின் புதின்னை பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களில் மிகவும் முக்கியத் தலைவர்களை மட்டுமே பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேச செய்வார்கள்.
 
கடைசியாக 2010–ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா இந்தியா வந்த போது பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசினார். அதற்கு பிறகு பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் விளாடிமிர் புதின்தான் பேச உள்ளார்.
 
டெல்லியில் தங்கி இருக்கும் போது பல்வேறு ஒப்பந்தங்களில் புதின் கையெழுத்திடுவார். குறிப்பாக இந்தியாவுடன் அணுசக்தி தொடர்பான விஷயங்களில் மேம்பாடு பெறச் செய்யும் ஒப்பந்தங்களை புதின் மேற்கொள்வார். இது தவிர இந்தியா–ரஷியா இடையிலான வைரத் தொழில் தொடர்பான ஒப்பந்தத்திலும் புதின் கையெழுத்திடுவார்.
 
ரஷியாவில் உள்ள எண்ணை வயில்களில் ஓ.என்.ஜி.சி. முதலீடு செய்யவும், பணிகளை மேற்கொள்ளவும் புதின் கையெழுத்திடும் ஒப்பந்தங்கள் உதவியாக இருக்கும். அது போல மும்பையில் வைரம் பட்டைத் தீட்டும் தொழில் பூங்கா அமைக்கவும் புதினுடன் செய்யப்படும் ஒப்பந்தம் வழிவகுக்கும்.
 
மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதன், முதலாக புதினை சந்தித்த போது கூடங்குளத்துக்கு வருமாறு அழைத்தார். அந்த அழைப்பை புதின் ஏற்று இருந்தார்.
 
எனவே அடுத்த வாரம் டெல்லி வரும் புதின் கூடங்குளத்துக்கும் வருகை தரக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிறைய சந்திப்புகளுக்கு திட்டமிடப்பட்டதால் கூடங்குளம் பயணத்திட்டத்தை புதின் கைவிட்டு விட்டார்.

No comments:

Post a Comment