Wednesday, December 03, 2014
கெய்ரோ::எகிப்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு ஆதரவாக முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது 13 போலீசார் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் 188 பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.எகிப்தில் முன்னாள் அதிபர் ஹோசினி முபாரக்குக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலைநகர் கெய்ரோ உட்பட பல்வேறு இடங்களில் வன்முறை கலவரங்கள் ஏற்பட்டது. அதிபர் முபாரக்குக்கு ஆதரவாக முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க முயன்ற போலீசாரையும் முபாரக் எதிர்ப்பாளர்களையும் கடுமையாக தாக்கினார்கள். இத்தாக்குதலின்போது 13 போலீசார் உட்பட ஏராளமான பொதுமக்கள் பலியானார்கள். இதைத் தொடர்ந்து, அதிபர் முபாரக் நீக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கலவரத்தில் முபராக்கின் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர்.
அவருக்குப் பதில், ராணுவ தளபதியாக இருந்த அப்தல் பத்தா அல் சிசி புதிய அதிபராக தோந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, எகிப்தில் முபாரக்குக்கு ஆதரவாக நடைபெற்ற கலவரம் தொடர்பாக எகிப்திய உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. கலவரங்களை தூண்டியதாக முன்னாள் அதிபர் ஹோசினி முபாரக், 7 பாதுகாவலர்கள் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் அல் அட்லி ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு ஊழல் வழக்கில் இவர்கள் அனைவருக்கும் கடந்த சனிக்கிழமை 3 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கியது.

இந்நிலையில், கெய்ரோவுக்கு அருகே புறநகர் பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற்ற கலவரத்தில் 13 போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் முபாரக்கின் ஆதரவாளர்கள் 188 பேரிடம் விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு நேற்று எகிப்திய நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
No comments:
Post a Comment