Saturday, December 27, 2014
ராமேசுவரம்::இலங்கை சிறையில் உள்ள 81 மீனவர்கள் மற்றும் 87 படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம், நாகப்பட்டிணம், காரைக்கால் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்தனர். இதன் பயனாக 66 மீனவர்கள், இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
இருப்பினும் மற்ற மீனவர்களையும் விடுவிக்கக்கேட்டு தமிழகத்தில் மீனவர்களின் வேலைநிறுத்தம் நீடித்தது. நேற்று வரை 11 நாட்கள் இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்க கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். மீனவர் சங்க தலைவர்கள் போஸ், அல்போன்ஸ், சகாயம், சேசு, எமரிட் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது. இன்று முதல் மீன்பிடிக்க செல்வது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி இன்று (சனிக்கிழமை) 400–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் மீன் பிடி துறைமுகம் மீண்டும் களைகட்டத் தொடங்கி உள்ளது.
No comments:
Post a Comment