கனடிய நாடாளுமன்றத்தில், கடந்த 27ம் திகதி மாவீரர்களை நினைவு கூர்ந்து,
நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் நிகழ்த்திய உரை கனடிய அரசியலில்
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புலிகளின் தீவிரவாத அமைப்பான மாவீரர்களுக்கு ஆதரவாக பேசியது
அதிர்ச்சியளிப்பதாக, கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் ப்ளானே
கூறியுள்ளார். மேலும், இது ஒரு முக்கியமான நாள் மற்றும் நினைவு கூர வேண்டிய
நாள் எனக் கூறியதற்காக அனைத்து கனடிய மக்களிடமும், முக்கிய
பிரமுகர்களிடமும் ராதிகா சிற்சபைஈசன் மன்னிப்பு கோர வேண்டும் என்று
கூறியுள்ளார்.
இந்த மாவீரர் தினம், தீவிரவாத அமைப்பான புலிகள் மறைந்த
தினம். கனடிய வீரர்கள் இறந்த நாளை, தீவிரவாதிகள் இறந்த நாளுடன் ஒப்பிட்டு
கூறியது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment