Monday, November 03, 2014
இலங்கை::தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டே யாழ்தேவி ரயில் சேவை கல்கிஸை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதேயொழிய இராணுவத்தினரின் வசதிக்காகவில்லையென அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இராணுவத்தினர் யாழ்ப்பாணம் செல்வதை நோக்கமாகக் கொண்டு ‘யாழ்தேவி’ ரயில் சேவையினை ஆரம்பித்திருப்பின் அதனை கொழும்பு கோட்டை வரை மட்டுப்படுத்தியிருக்கவோ அல்லது பனாகொடை வரை அதன் சேவையை விஸ்தரித்திருக்கவோ நாம் ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்போமெனவும் அமைச்சர் கூறினார்.
பொதுமக்களுக்காகவன்றி இராணுவத்தினருக்காகவே யாழ்தேவி ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வடமாகாண சபை உறுப்பினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை முற்றாக மறுத்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்ட விளக்கத்தையளித்தார்.
கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் புறங்களை கவனத்திற் கொண்டால் கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளை, கல்கிஸ்ஸை ஆகிய பகுதிகளிலேயே தமிழ் மக்கள் செறிந்து வாழ்க்கின்றனர். அவர்களின் வசதி கருதியே இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
தற்போது கல்கிஸ்ஸையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நான்கு ரயில்கள் செல்கின்றன. சுமார் 2500 பயணிகள் மாத்திரமே செல்லக்கூடிய இந்த ரயில்களுக்காக நாள்தோறும் சுமார் 5 ஆயிரம் பேர் ரயில் சீட்டைப் பெற்றுக் கொள்ள வருகின்றனர். ‘யாழ் தேவி’ ரயிலுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன் புதிதாக மேலும் பல ரயில் வண்டிகளை சேவையிலீடுபடுத்து மாறும் எமக்கு கோரிக்கைகள் கிடைத்துள்ளன.
நடைமுறையிலுள்ள ரயில் வண்டிகளுடன் புதிதாக ரயில் பெட்டிகளை இணைத்துக் கொள்வது சாத்தியமாகாது என்பதால் ரயில் வண்டிகளின் எண்ணிக்கையினை அதிகரிப்பது குறித்தும் நாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் வெகு விரைவில் ‘யாழ் தேவி’ ஊடாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மரக்கறி வகைகளை எடுத்து வருவது குறித்தும் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.
கரட், லீக்ஸ் ஆகியவற்றைத் தவிர்ந்த ஏனைய அனைத்து வகை மரக்கறிகளையும் யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றை ரயிலுடாக கொழும்புக்கு கொண்டு வருவதன் மூலம் மரக்கறி களுக்கான விலைகளை மேலும் குறைக்க முடியும். அத்துடன் போக்குவரத்து செலவு நேரம் ஆகியன மிச்சப்படுத் தப்படுவதுடன், லொறிகளில் ஏற்றி இறக்குவதால் மரக்கறிகளுக்கு ஏற்படக் கூடிய 25 சதவீத சேதத்தை தவிர்க்கக் கூடியதாக இருக்குமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment