Wednesday, November 26, 2014
இலங்கை::யாழ்ப்பாணத்தில் மாவீரர் தின சுவரொட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை::யாழ்ப்பாணத்தில் மாவீரர் தின சுவரொட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீரசிங்கம் சுலக்ஷன் என்பவரே பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். புத்தூர் சந்தியில் உள்ள வடமாகாண சபை உறுப்பினர் சயந்தனின் வீட்டுக்கு அருகில் வைத்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து மாவீரர் தின சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வீரசிங்கம் சுலக்ஷன் தற்போது யாழ். பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை
கைது செய்ய பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment