Sunday, November 30, 2014
இலங்கை::அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு
அமைச்சர் நவீன் திஸாநாயக்க அமைச்சுப் பதவியை துறந்துள்ளார். அமைச்சுப்
பதவியை ராஜினாமா செய்துள்ளதா நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இரவு தாம் இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ராஜினமா கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நீண்டகாலமாக நுவரெலியா
மாவட்டத்தின் தொகுதி அமைப்பாளராக கடமையாற்றி வந்த நவீன் திஸாநாயக்கவின்
பதவி, அமைச்சர் சீ.பி ரட்நாயக்கவிற்கு கடந்த வாரம் வழங்கப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
நவீனின் தந்தை காமினி திஸாநாயக்க கடந்த 1994ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட போது புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment