Friday, November 28, 2014
இலங்கை::புலிகளின் மாவீரர் தினத்தையொட்டிய நிகழ்வுகள் ரகசிமாக நடக்கின்றதா என்பதை அவதானிக்கும் வகையில் கிழக்கில் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகள் உஷார் படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அலைபேசியூடாக மாவீரர் தினச் செய்திகளை பரிமாறியதாகக் கூறப்படும் இருவரை நேற்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாவீரர்களாகிய நீங்கள் புதைக்கப்பட்டவர்கள் அல்ல விதைக்கப்பட்டவர்கள், என்றோ ஒரு நாள் நீங்கள் வீறுகொண்டெழுவீர்கள்' என்ற குறுஞ்செய்தியை பரிமாறிக்கொண்டதாகக் கூறப்படும் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
No comments:
Post a Comment