இரத்மலானை, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில் 24வது பொது பட்டமளிப்பு விழா நிகழ்வு!
Monday, November 03, 2014
இலங்கை::கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் ரொஹான் தலுவத்தவின் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துக் கொண்டதுடன் மேற்படி பல்கலைக் கழகத்தின் பணிப்பளர் சபைத் தலைவரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ பல்கலைக் கலகத்தின் உப வேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விஞ்ஞான முதுமாணி (MSc) XII மற்றும் விஞ்ஞான பட்டதாரி ((BSc) VII கற்கைகளை முடித்துக் கொண்ட முப்படைகளைச் சேர்ந்த 232 பேருக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் ரொஹான் தலுவத்தவினால் பட்டம் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் சகல துறைகளிலும் சிறந்த திறமைகளை வெளிக்காண்பித்த முப்படை வீரர்களுக்கான தங்க பதக்கம் மற்றும் கேடயங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கி வைத்தார்.
கொத்தலாவல பல்கலைக் கழகத்தின் வரலாற்றில் முதற்தடவையாக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருத்துவ பீடத்தில் கற்கைகளை முடித்துக் கொண்ட 25 பேருக்குக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும். “மருத்துவ இளநிலை பட்டம்” “சத்திரசிகிச்சை இளநிலை பட்டம்” ஆகிய கற்கைகளுக்கே பட்டங்கள் வழங்கப்பட்டதுடன் எம்பிபிஎஸ் கற்கையில் சகல துறைகளிலும் சிறப்பு தேற்ச்சி பெற்ற சப் லெப்டினன்ட் பிஎல்எல் கருணாதிலக்கவுக்கு ஜனாதிபதி தங்க பதக்கத்தை வழங்கினார்.
27 மற்றும் 28 வது கற்கை பிரிவில் கற்ற அதிகாரிகளுக்க விஞ்ஞான முதுமாணி (பாதுகாப்பு கற்கை) பட்ட முகாமைத்துசம், விஞ்ஞான முதுமாணி பட்டம் (பாதுகாப்பு மற்றும் தந்திரோபாய கற்கை) பாதுகாப்பு முகாமைத்துவ பட்டப்பின் படிப்பு டிப்ளோமா, பொறியியல், விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம், வர்த்தகம் மற்றும் கலை ஆகிய துறைகளுக்காக பட்டங்களே வழங்கப்பட்டன.
இனங்களுக்கு இடையில் நட்புறவை ஏற்படுத்த முப்படையினர் பல்வேறு நடவடிக்கைகளை தற்பொழுது மேற்கொண்டு வருகின்றனர். இதன மூலம் இனங்களுக்கு இடையில் பாலமாக முப்படையினர் செயற்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இங்கு உரையாற்றும் போது தெரிவித்தார்.
ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில் :-
குறுகிய காலப்பகுதிக்கள் மருத்துவ பட்டதாரிகளையும் எமது இந்த பல்கலைக் கழகம் மூலம் வெளியாக்க முடிந்துள்ளது. எதிர் காலத்தில் இது மேலும் வளர்ச்சியடைந்து அதிகரிக்கும் என நம்புகிறேன்.
தற்பெழுது வேரஹெரவில் முழு வசதிகளைக் கொண்ட வைத்தியசாலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பல்கலைக் கழகத்தை சகல துறைகளிலும் முன்னேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இந்த பல்கலைக் கழகத்தில் உள்நாட்டவர்கள் மாத்திரமின்றி வெளிநாட்டவர்களும் கல்வி கற்று வருகின்றனர்.
கோத்தலாவல பல்கலைக் கழகத்தில் உள்ளவர்கள் மாத்திரமன்றி யுத்தத்திற்கு பின்னர் முப்படை வீரர்கள் மத்தியில் கற்றல் துறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஏதாவத ஒரு கற்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் முயற்ச்சிக்கின்றனர். இது மிகவும் வருவேற்க தக்கது ஏனெனில் எதிர் காலத்தில் மேலும் அறிவு ரீதியிலுத் தேர்ச்சி பெற்ற படைவீரர்கள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளனர்.
அதேபோன்று வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நாங்கள் மஹிந்தோதய கூடங்களை அமைத்து கொடுத்து வருகின்றௌம் இதன் திறப்பு விழாவுக்கு செல்லும் போது கல்வி துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளதை காணக் கூடியதாக உள்ளது.
எனவே, கல்வித் துறையில் மேம்படும் பட்சத்தில் பிரிவினை வாதம் என்ற சிந்தனையில் மாற்றம் ஏற்படும் என்று நான் நம்புகிறேன்.
இனங்களுக்கு இடையில் நட்புறவை எற்படுத்தும் பாலமாக முப்படையினர் செயற்படுகின்றனர் இதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அது மேலும் பலமாக அமையும் என நான் நம்புகிறேன்.
நிறுத்தப்பட்டிருந்த யாழ். தேவி புகையிரத சேவையை நாம் மீண்டும் ஆரம்பித்துள்யோம். அன்று வடக்குக்கு பயணம் செய்ய ஒரு வழி மாத்திரமே இருந்தது மாறாக தற்பொழுது விமானம், பஸ் (தரைவழி) மற்றும் புகையிரதம் என்று மூன்று வழிகள் உள்ளன.
யாழ் தேவியில் இராணுவத்தினர் யாழ் தேவி புகையிரதத்தில் பயனம் செய்தால் தண்டவாலத்தில் தலையை வைப்பதாக சிலர் கூறியுள்ளனர். அபிவிருத்தி வேண்டாம் என்று பிரிவினைவாதிகள் கூறிவருவதோடு பிரிவினை வாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
கடந்த காலத்தை போன்ற யுகத்தை ஏற்படுத்த இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்கு படைவீரர்கள் தொடர்ந்தும் பங்களித்து வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்னொர்.
லெப்டினன்ட் கொமாண்டர் கேஜிஎஸ்கேஎன் ரஞ்ஜித்
சப் லெப்டினன்ட் கேஜிரிஎம் ஜயதிஸ்ஸ
லெப்டினன்ட் என்சிசிபி நவரட்ன
சப் லெப்டினன்ட் கருணாதிலக்க
இரண்டாவது லெப்டினன்ட் ரிடபிள்யூகேயூ சந்திரரத்ன
பைலட் அதிகாரி ஈஆர்எம்எஸ் ஏக்கநாயக்க
சப் லெப்டினன்ட் விஏடிஜேவி பெரேரா
சப் லெப்டினன்ட் ஏஎம்எம் டி அல்விஸ்
சப் லெப்டினன்ட் பிஎல்எல் கருணாதிலக்க
இரண்டாவது லெப்டினன்ட் எச்கேஎஸ் நிரோஷன்
லெப்டினன்ட் கேடிபிஎம் கத்ரியாராச்சி
லெப்டினன்ட் டபிள்யுபிசிடி விஜேபால
ஆகியோர் தத்தமது துறைகளில் சிறப்பு தேர்சி பெற்றமைக்கான பதக்கங்கள், சின்னங்கள் மற்றும் கேடயங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களால் பெற்றுக் கொண்டனர்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ். வெளிநாட்டு தூதுவர்கள், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்க, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அயாமா ராஜபக்ஷ, முப்படைகளின் உயர் அதிகாரிகள், வீடுகளை பெற்றுக் கொண்ட முப்படை வீரர்கள், அவர்களது குடும்ப உறவினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment