Tuesday, November 25, 2014

அமெரிக்க கூட்டு படையினரின் பைக் தாக்குதல்: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 200 பேர் அவுட்!

Tuesday, November 25, 2014
லண்டன்::ஈராக் மற்றும் சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முகாமிட்டுள்ள பகுதிகளில், கடந்த சில நாட்களாக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன்படி, ஒவ்வொரு நாளும் எட்டு பயங்கரவாதிகளை கொல்வது என, திட்டமிட்டு, அதை செயல்படுத்தி வருகின்றனர்.

ஈராக் மற்றும் சிரியாவின் சி
 
ல பகுதிகளை, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கர வாதிகள், அதை, 'இஸ்லாமிய நாடு' என, அறிவித்துள்ளனர். இந்த பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்ட, எஸ்.ஏ.எஸ்., என, அழைக்கப்படும், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
 
தற்போது இந்தப் படையினர், தினமும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் எட்டுப் பேரை கொல்வது என்ற முடிவோடு, புதுவிதமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்தின்படி, இஸ்லாமிய நாடு என, அறிவிக்கப்பட்ட பகுதிகளில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி கள் பதுங்கி உள்ள இடங்களை, ஆளில்லா விமானங்கள் மூலம் கண்டறிகின்றனர். பின், எஸ்.ஏ.எஸ்., படையைச் சேர்ந்த ஒரு பிரிவினர், ஹெலிகாப்டர் மூலம், பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் இடம் அருகே சென்று இறங்குகின்றனர்.
 
அத்துடன் படை வீரர்கள் பயணிப்பதற்காக, 'குவாட் பைக்' என, அழைக்கப்படும், துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட பிரத்யேக பைக் ஒன்றும், ஹெலிகாப்டர்களில் இருந்து இறக்கப்படுகிறது. இறங்கிய இடத்திலிருந்து, அந்த பைக் மூலம், பயங்கரவாதிகள் பதுங்கி உள்ள இடத்திற்கு அருகே செல்லும் எஸ்.ஏ.எஸ்., படையினர், அதிரடி தாக்குதல் நடத்தி, அவர்களை கொல்கின்றனர்.
 
இந்த வகை தாக்குதலில், தினமும், எட்டு ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கொல்லப்படுகின்றனர். கடந்த நான்கு வாரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில், 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். எஸ்.ஏ.எஸ்., படையினர், ஒவ்வொரு நாளும் எந்தப் பகுதியில் தாக்குதல் நடத்துவர் என்பது, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு தெரியாததாலும், அவர்களால் கண்டுபிடிக்க முடியாததாலும், அதிர்ந்து போயுள்ளனர்.
 
அவர்களுக்கு உயிர் பயம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதல் தொடர்ந்தால், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், விரைவில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடுவர் என்பது மட்டும் நிச்சயம்.

No comments:

Post a Comment