Friday, October 31, 2014
இலங்கை:வட மாகாணத்திற்க்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு!
இலங்கை:வட மாகாணத்திற்க்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு!
வட மாகாணத்தில் கீழ் காணப்படும் பிரதேசங்களுக்கு விஜயம்
செய்யும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் பாதுகாப்பு மற்றும்
நகர அபிவிருத்தி அமைச்சின் அனுமதியை பெற வேண்டும். அனுமதிக்கான விண்ணப்ப
பத்திரங்களை பெக்ஸ் அல்லது மின்னஞ்சலூடாக அனுப்ப முடியும்
- யாழ் மாவட்டம்
- கிளிநொச்சி மாவட்டம்
- முல்லைத்தீவு மாவட்டம்
- மன்னார் மாவட்டம் (விடத்தல்தீவுக்கு வடக்கே உள்ள பிரதேசங்கள்)
- வவுனியா மாவட்டம் (ஓமந்தைக்கு வடக்கே உள்ள பிரதேசங்கள்)
கீழ் காணப்படும் பெக்ஸ் இலக்கம் அல்லது மின்னஞ்சலூடாக
விண்ணப்பங்களை சமரப்பிக்க முடியும்
Fax- +94112328109
சமர்பிக்கப்பட வேண்டிய தவல்கள் வருமாறு
- பெயர்
- கடவுச்சீட்டு இலக்கம்
- பயனிக்க உத்தேசித்த திகதி
- திரும்பி வர உத்தேசித்த திகதி
- நோக்கம்
- பயணம் செய்யும் முறை (விமானம், புகையிரதம், பொது போக்குவரத்து, தனியார் வாகனம்)
- வாகனப் பதிவு (தனியார் வாகனமாக இருந்தால் மாத்திரம்)
- சாரதியின் பெயர் (தனியார் வாகனமாக இருந்தால் மாத்திரம்)
- நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதேசங்களுக்கு செல்ல வேண்டுமாயின் அது தொடர்பான விபரம்
குறிப்பு: குறித்த பிரதேசங்களில் தற்பொழுது
நடைமுறையிலுள்ள அபிவிருத்தி திட்டங்கள், அல்லது முதலீட்டு நோக்கங்களுக்காக
பயணம் செய்பவர்கள் தங்களது விண்ணப்பங்களை தேவையேற்படின் அந்தந்த
நிறுவனங்களினூடாக
அதாவது பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, நல்லிணக்க ஆணையாளர்
நாயகத்தின் காரியாலயம், முதலீட்டு சபை (etc) போன்றவற்றினூடாக அனுப்பி
வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
No comments:
Post a Comment