Monday, October 27, 2014
இலங்கை::இராணுவ ட்ரக் மோதியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உடுவில் மானிப்பாய் வீதியில் உள்ள மதவடி பகுதியில் மோட்டார் சைக்கிளும் இராணுவ ட்ரக் வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வவுனியா, மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த வைத்திலிங்கம் ஜெயராசா என்பவரே படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்தவர் இராணுவத்தினரால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவர் அங்கிருந்து அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment