Friday, October 24, 2014

அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்படாவிட்டால் ஆளும் கட்சிக்கான ஆதரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும்: ஜாதிக ஹெல உறுமய!

Friday, October 24, 2014
இலங்கை::
அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்படாவிட்டால் ஆளும் கட்சிக்கான ஆதரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் ஜாதிக ஹெல உறுமய கட்சி மிக முக்கியமான தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னதாக அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் ஆளும் கட்சியை விட்டு விலக நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வருவதா இல்லையா என்பதனை தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே என தெரிவித்துள்ளார்.

தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது எனவும் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டுமாயின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தை விட்டு விலகுவது என்பதனை விடவும், அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment