Thursday, October 23, 2014

புலிகள் மீதான தடையை ஐரோப்பிய நீதிமன்றம் நீக்கியது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை: அரசாங்கம்!

Thursday, October 23, 2014
இலங்கை::புலிகள் மீதான தடையை ஐரோப்பிய நீதிமன்றம் நீக்கியது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கவல்ல சம்மந்தப்பட்ட  ஐரோப்பிய ஒன்றிய தரப்புகளுக்கு தேவையான தகவல்களை வழங்க தொடங்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
புலிகள் மீதான தடைநீக்கப்படுவதை தடுப்பதற்க்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

குறிப்பிட்ட நீதிமன்ற வழக்கு தொடுக்கப்பட்ட காலத்திலிருந்து,ஐரோப்பிய ஒன்றியத்திறகுள்ளிலிருந்தும், ஐரோப்பாவின் துறைசார்ந்த விசேட சட்டத்தரணிகளிடமும் சட்ட ஆலோசனையும், கருத்துக்களும் கேட்கப்பட்டது.

இதனடிப்படையில் இலங்கை அரசாங்கம் மிகவும் பயனுள்ள வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டது,தடையை நியாயப்படுத்துவதற்க்கு அவசியமான குறிப்பிடதக்க ஆதாரங்களை அது தொடர்ச்சியாக குறிப்பிடத்தக்க அளவிற்க்கு வழங்கியது.

இலங்கை ஐரோப்பிய ஒன்றியம் சாராத நாடாக காணப்பட்டதால்,ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுநீதிமன்றத்தின் முன்னால் தோன்றுவதற்காக விசேட நிபந்தனைகளை ஏற்கவேண்டியிருந்தது- இவை தேச நலனிற்க்கு எதிரானவை,

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் புலிகள் முன்வைக்கும் வாதங்களை எதிர்ககொள்வதற்காக ஐரோப்பிய ஆணைக்குழுவிற்க்கு உதவுவதற்காக சகலவிதமான ஆதாரங்களையும் முன்வைத்தது.

நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ,குறிப்பிட்ட தரப்புகள் தீர்ப்பிற்க்கு எதிராக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதாரவாக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே செயற்படத்தொடங்கியுள்ளது.

எஞ்சியிருக்கு புலிகள் தனது பொதுமக்களை பலவந்தமாக பணம் பறிப்பதன் மூலமாக அச்சுறுத்துவதை தடுப்பதற்காகவும், புலிகள் புத்துயிர் பெறுவதை தவிர்ப்பதற்காகவும்,அரசாங்கம் அதனை செய்கின்றது. அரசாங்கம் இதனை மிகுந்த முன்னனுரிமைக்குரிய விடயமாக கருதுகின்றது...

புலிகளின் மீதமுள்ள தரப்பினரால் மேற்கொள்ளப்படும் நிதி சேகரித்தல் ஊடாக இலங்கை பிரஜைகள் அச்சுறுத்தப்படுவதிலிருந்து காப்பாற்றவும் மீண்டும் இலங்கைக்குள் பயங்கரவாதம் உருவாகுவதை தடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற வழக்குடன் தொடர்புபட்ட் தரப்பினருக்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வழக்கின் பிரதிவாதிகளுக்கும் இடையீட்டு மனுதாரர்களுக்கும் தொடர்ச்சியாக தகவல்களை வழங்கிவந்தோம். அதன்படி இலங்கையினால் எவ்வளவு உயர்மட்டத்தில் செயற்பட முடியுமோ அந்தளவுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டோம் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயத்தில் வழக்கின் பிரதிவாதி தரப்புக்கள் எதிர்காலத்தில் மேற்கொள்கின்ற செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும். இது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்படுவையாக கருதப்படும். வழக்கின் தீர்ப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் ஆச்சரியமடைந்துள்ளோம் என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கடந்த 2011 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகளினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுவருகின்ற கருத்துக்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு ஆச்சரியமடைந்துள்ளது. இந்த வழக்கின் பிரதிவாதியாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு காணப்பட்டதுடன் இடையீட்டு மனுதாரர்களாக நெதர்லாந்தும் பிரிட்டனும் செயற்பட்டன.

அந்தவகையில் இந்த விடயம் குறித்து அக்கறை காட்டுகின்றவர்களினால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் போலி தர்க்கங்களை அடிப்படையாகக்கொண்டுள்ளன. இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் விசேட சட்ட நிபுணர்களிடம் ஆலோசனையை பெற்றோம் என்பதனை வெளிவிவகார அமைச்சு என்ற வகையில் இங்கு குறிப்பிடுகின்றோம்.

அந்தவகையில் வழக்கின் பிரதிவாதிகளுக்கும் இடையீட்டு மனுதாரர்களுக்கும் தொடர்ச்சியாக தகவல்களை வழங்கிவந்தோம். அதன்படி இலங்கையினால் எவ்வளவு உயர்மட்டத்தில் செயற்பட முடியுமோ அந்தளவுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இலங்கையானது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடு அல்ல என்பதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தலையிடுவதற்கு இலங்கையின் தேசிய அபிலாஷைகளுக்கு எதிராக பல நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டியிருந்ததாலேயே மேற்கண்டவாறு செயற்பட்டோம்.

இவ்வாறான பின்னணியில் புலிகளின் இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அனைத்து தகவல்களையும் இலங்கை வழங்கியது.
தீர்ப்பை வழங்கியதன் பின்னர் பிரதிவாதிகள் மற்றும் இடையீட்டு மனுதாரர்களுக்கு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு செல்லும் சந்தர்ப்பம் உள்ளது.

வழக்கில் பெயரிடப்பட்டுள்ள தரப்புக்களின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் பார்க்கும்போது வரையறைகளுக்கான ஒழுங்கு விதிகளை நிறைவேற்றிக்கொள்ளல் ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தல் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் தேசிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல் ஆகிய மாற்றுவழிகள் அவர்களிடம் உள்ளன.

புலிகளின் மீதமுள்ள பகுதியினரால் மேற்கொள்ளப்படும் நிதி சேகரித்தல் ஊடாக இலங்கை பிரஜைகளை அச்சுறுத்துவதிலிருந்து காப்பாற்றவும் மீண்டும் இலங்கைக்குள் பயங்கரவாதம் உருவாகுவதை தடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் குறித்த வழக்குடன் தொடர்புபட்ட் தரப்பினருக்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. மேலும் எதிர்காலத்தில் இந்தத் தரப்புக்கள் மேற்கொள்கின்ற செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும். இது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்படுவையாக கருதப்படும்.

 

No comments:

Post a Comment