Wednesday, October 1, 2014

ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு பொய்யான தகவல்கள் உள்ளடங்கிய கடிதமொன்றை வழங்கிய தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 33 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

Wednesday, 01, October, 2014
இலங்கை::இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றிவழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு பொய்யான தகவல்கள் உள்ளடங்கிய கடிதமொன்றை அனுப்பி வைத்ததாகவே இவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் (புலிகள் புலிகளின் ஆதரவாளர்கள்) தமிழ் மக்கள் இன அழிப்பிற்கு இலக்கானதாகத் தெரிவித்து அதற்கான ஆதாரங்கள் உள்ளடங்கிய கடிதமொன்றை (புலி)கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
(புலி)கூட்டமைப்பின் 33 உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை வலியுறுத்தும் வகையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நுகோகொடை கங்கொடவத்த பங்கிரிவத்த வீதி இலக்கம் 42 என்னும் இலக்கத்தைச் சேர்ந்த பீ.ஜீ. ரவீந்திர நிசான் என்பவர் நேற்று இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்தக் கடிதம் ஊடாக தமிழ் சிங்கள மக்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் இதனால் குறித்த கடிதத்தை அனுப்பியவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மனுவில் கோரப்பட்டுள்ளது.
 
2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி இந்த கடிதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அப்போதைய ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வட மாகாணசபையைச் சேர்ந்த 28 உறுப்பினர்களும், கிழக்கு மாகாணசபையைச் சேர்ந்த 5 உறுப்பினர்களும் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர். பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் அரசியல் அமைப்பில் காணப்படுகின்ற போதிலும் அது இன மத குரோதங்களை தூண்டக் கூடிய வகையில் பயன்படுத்தப்படக் கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
போர் இடம்பெற்ற காலத்தில் இலங்கைப் அப்பாவி தமிழ் மக்களை (புலிகளை) கொன்றழித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வடக்கு கிழக்கில் தமிழர் பூர்வீகப் பகுதிகளின் சனத்தொகைப் பரம்பலை மாற்றியமைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழ் மக்கள் இன அழிப்பிற்கு உள்ளானதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு பிழையானது எனவும், போர் காலத்தில் 350,000 மக்களை படையினர் மீட்டனர் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே போலிக் குற்றச்சாட்டு சுமத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment